Sunday, August 31, 2014

நூறுநாற்காலிகள் கேசவமணிஜெயமோகனின் அறம் தொகுப்பிலுள்ள யானை டாக்டர் மற்றும் கோட்டி கதைகளை மீண்டும் வாசித்தேன். இரண்டு கதைகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவே, அதைக் குறித்து எழுதலாம் எனத் தோன்றியது. இந்தக் கதைகளில் வரும் யானை டாக்டரும் பூமேடையும் ஒரே குணாம்சத்தைக் கொண்ட கதாபாத்திரங்கள். என்ன வித்தியாசம் எனில், ஒருவர் விலங்குகளிடையே தன் பணியைச் செய்கிறார் மற்றவர் மனிதர்களிடையே செய்கிறார். அவ்வளவுதான். ஆனால் இருவரும் மனிதர்களுக்கு, சமூகத்திற்கு நன்மை என்று நினைப்பதை விடாப்பிடியாகச் செய்கிறார்கள். ஒருவர் மனிதர்களிடமிருந்து விலங்குகளை காக்க முயற்சிக்க, மற்றவர் மனிதர்களிடமிருந்தே மனிதனைக் காப்பாற்றப் போராடுகிறார். ஒருவர் விலங்குகளிடம் மனிதர்கள் கொள்ளும் இணக்கம், நேசம் ஆகியவற்றை வலியுறுத்த, மற்றவர் மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பும் பாசமும் கொள்வதை அறிவுத்துகிறார். ஆனால் இருவருமே சமூகத்தால் பைத்தியக்காரர்கள் என்று பரிகசிக்கக் கூடியவர்களாக, அங்கீகரிக்கப் படாதவர்களாக இருப்பது நம் சமூக அமைப்பின் சாபக் கேடுகளில் ஒன்று.

யானை டாக்டரில் வரும் காட்டைப் பற்றிய சித்தரிப்புகள் நம்மை ஜெயமோகனின் காடு நாவலுக்குள் தன்னிச்சையாக இழுத்துச் சென்றுவிடுகிறது. எனவே காட்டுடனும், யானைகளுடனும் நாம் மிகவும் நெருக்கம் கொண்டுவிட்டது போல் உணர்கிறோம். விலங்குகளைப் பற்றிய டாக்டரின் பார்வை நம் மனதைச் சம்மட்டியால் அடித்து விழிக்கச் செய்கிறது. புழு என்ற உயிர் கைக்குழந்தை என்பதாக அவர் சொல்வது, நம் மனம் கொள்ளும் அருவருப்பை முற்றிலுமாக துடைத்து எறிந்துவிடுகிறது. இந்த பூமியில் ஜீவித்திருக்கும் அனைத்து உயிர்களோடும் நாம் இந்த வினாடியிலிருந்து நேசம் கொள்ளவேண்டும் என்று மனம் துடிக்கிறது. கதையின் உச்சகட்டமாக யானைகள் டாக்டரைத் தேடி வந்து வைத்தியம் பார்க்கும் காட்சி நம்மை சுக்கு நூறாக உடைத்து இந்தப் பிரபஞ்சத்தின் காற்றோடு காற்றாய் கரைய வைக்கிறது.

மனிதர்களில் பலர் நாட்டில் மட்டுமல்ல, காட்டிற்கும் சென்று அதன் அமைதியைச் சீரழிக்கும் குணம் படைத்தவர்கள். இயற்கை என்பதன் அர்த்தத்தை முற்றாக இழந்துவிட்ட நாகரீக மனிதர்கள்! எல்லாவற்றையும் வெகுசுலபமாக கழிப்பறையாக மாற்றிவிடுவதில் வல்லவர்கள்! தமது இன்பத்தை அல்லாமல் பிறர் துன்பத்தை லவேசமும் பொருட்படுத்தாத மனிதர்கள். மனிதப் பிறவியிலேயே பேதம் கற்பிக்கும் இவர்களின் மனோபாவமே, விலங்குகளை ஐந்தறிவுடையவையாகச் சித்தரிக்க வைத்திருக்கிறது. யானை டாக்டர் இத்தகைய மனிதர்களை அடையாளம் காட்டுவதோடு, அவர்களை வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறது. மேலும் யானைகளைப் பற்றியும் விலங்குகள் பற்றியும் மிக நெருக்கமாக அறியச்செய்து, அதன் மூலம் விலங்குகள் மீதான நம் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது.

கோட்டியில் வர்ணனைகள் இல்லையென்றாலும் அது நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் சற்றும் குறைந்ததல்ல. இந்தக் கதையில் உரையாடல்கள் மூலமாகவே நம் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறார் ஜெயமோகன். மனிதர்கள் நிலை கண்டு நாமே வெட்கப்படுகிறோம். நாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி நமக்கு லவேசமும் இல்லை என்பதை நம்மை மிகத் தீவிரமாக உணரச் செய்யும் கதை இது. கதையின் இறுதியில் பூமேடை என்ற பாத்திரத்தின் முன் நாம் கூனிக் குறுகி சிறுத்துவிடுகிறோம். நாம் செய்த இந்தப் பாவத்திற்கு நமக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் மோட்சமில்லை என்றே படுகிறது. உண்மையில் யார் கோட்டி? பூமேடையா? இல்லை அவரைப் புரிந்துகொள்ளாத மனிதர்களா? மனிதர்களை நெருங்கி அவர்களை அறிந்துகொள்ள வழிசெய்யும் கோட்டி, மனிதன் பார்வையில் இருக்கும் கோளாறை சரிசெய்ய முயற்சிக்கிறது.

யானை டாக்டரின் இறுதியில் நம் மனம் கொள்ளும் பரவசம் நெகிழ்ச்சியினால், அன்பினால் விளைவது. ஆனால் கோட்டியின் இறுதியில் நம் மனம் அடையும் பச்சாதாமும் பரிதாபமும் நம் மனம் கொள்ளும் ஆவேசத்தினால் ஏற்படுவது. ஒரு கதை நீராய் நம் மனதைக் குளிர்விக்கிறது. மற்றொரு கதையோ நம் மனத்தை நெருப்பாய் தகிக்க வைக்கிறது. ஒன்றில் உள்ளம் நிரம்பிய உணர்வு மற்றொன்றிலோ உள்ளம் வெறுமையானதாய் உணர்வு. யானை டாக்டர் அங்கீகரிக்கப் படாமல் போவதைவிட, பூமேடை புறக்கணிக்கப்படுவது நம் மனதை அதிகமும் வருத்துகிறது. ஆனால் இருவருமே மற்றவர்களின் அங்கீகாரத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதும், தாங்கள் ஆற்றும் பணியே முக்கியம் எனக் கருதுவதும் நம்மைப் பெரிதும் நிலை குலையச் செய்கிறது. காரணம் நாம் அவ்வாறு இல்லையே என்ற நம் ஏக்கமும் இயலாமையும்தான். ஆக, அதன் பாதிப்பிலிருந்து நம் மனத்தில் கிளர்ந்தெழும் மாற்றம் எனும் வித்தை விதைக்கும் வித்தையை இக்கதைகளில் மிகத் திறம்படச் செய்திருக்கிறார் ஜெயமோகன்.

இவ்விரண்டு கதைகளையும் படித்து முடித்ததும் நம் மனம்கொள்ளும் பாய்ச்சலும் வெறுமையும் சொல்லும் தரமன்று. ஏன்? ஏன்? என நூற்றுக் கணக்கான கேள்விகள் மனதில் எழுந்து நுரைக்க, அவற்றுக்கு விடைகாண முடியாமல் நாம் தவிக்கிறோம். நாம் மனிதன் என்பதற்கு அவசியமும் அத்தாட்சியும் என்ன என்ற வினாவை இரண்டு கதைகளும் நம் மனதின் அடியாழம் வரை எடுத்துச் சென்று நம்மை உலுக்குகிறது. நாம் எங்கே இருக்கிறோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு விடையாகவே இந்தக் கதைகள் நம்முன் பேருருவம் காட்டி நின்று நம்மை அச்சுறுத்துகிறது. அந்த அச்சம் நம்மை விழிக்கச் செய்யாத பட்சத்தில் இந்த பூமி மீதான நம் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

அறியாமை, இயலாமை, முயலாமை, சுயநலம் மற்றும் அலட்சியம் ஆகியவையே மனிதர்களின் இத்தகைய நடத்தைக்கான காரணமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டியும் அவ்வப்போது நல்லவை நடப்பது யானைடாக்டர், பூமேடை போன்ற நல்ல மனிதர்கள் காலந்தோறும் தோன்றியபடி இருப்பதால்தான். அவர்களை நாம் அடையாளம் காணாவிடினும், அங்கீகரிக்காவிடினும் முடிந்தவரை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே இக்கதைகள் நம்மை சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கின்றன.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_16.html#sthash.eBfvJ72W.dpuf

நம் சமூக அவலத்தின் ஒரு காலகட்டத்தை அப்பட்டமாக நம்முன் வைக்கிறது வணங்கான். அறம் சிறுகதை வரிசையில் நேர்த்தியாகவும் அழகாகவும் வெளிப்பட்ட ஒரு கதை என இதைச் சொல்ல முடியும். மனிதர்கள் விலங்குகளைவிடக் கொடுமையாக, கேவலமாக நடத்தப்பட்ட அவமதிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வழியின்றி அவற்றைத் தங்கள் வாழ்க்கை முறையாகவே ஏற்றுகொண்ட மனிதர்களிடையே, வீறுகொண்டு எழுந்த ஒரு மனிதனின் கதை. படிக்கப் படிக்க நம் சமூகத்தின் அன்றைய கொடுமைகள் நம்மைப் பதைக்கச் செய்வதைவிட, ஏன் அவர்கள் அப்படி இருந்தார்கள் என்ற கேள்விதான் பிரதானமாக நம் மனதை அலைக்கழிக்கிறது. அதற்கான விடையாகத்தான் இந்தக் கதை என்பது கதையை வாசித்து முடித்ததும் நாம் உணர்ந்து கொள்கிறோம்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் அறியாமை, பசி இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த இரண்டில் அறியாமையைவிட, பசி மிகவும் வலிமையானது. நமக்கெல்லாம் பசி என்பதன் உண்மையான அர்த்தம் தெரியாது என்றே சொல்லலாம். அடுத்த வேளை உணவைத் தள்ளிப் போடுவது பசி அல்ல. மாறாக அடுத்த வேளை உணவு கிடைக்குமா? கிடைக்காதா? எப்போது கிடைக்கும்? என்று தெரியாத தவிப்புதான் பசி. எனவே மனிதன் இருப்பைத் தீர்மானிப்பதில் பசி முக்கியமானதாகிறது. அந்த பசியிலிருந்தே மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பு உருவாகிறது. மனிதனின் வயிற்றுப் பசி அவனை எதையும் தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்கும்படி செய்துவிடுகிறது என்பதைப் பார்க்கும் போது பசியில்லாத மனிதனைப் படைக்கத் தவறிய இறைவன் மீதே குற்றம் சொல்ல முடிகிறது. இத்தகைய மனிதர்களின் மீட்சிக்கு நேசமணி போன்றவர்கள் போராடினார்கள் என்பதைவிட இதற்கு வெள்ளைக்காரர்களும் ஒருவகையில் உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்கள் சுயநலத்திற்காக நமக்குச் செய்த தீங்குகளில் மிகப் பெரிய நன்மையாக முடிந்தது இதுவென்றே சொல்லலாம்.
வணங்கானின் அப்பா யானையின் அடியில் கட்டப்படுவதும், பின்னாளில் அவர் அதே யானை மீது ஏறிவருவதும் நம் மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. கதையில் யானை என்பது அடங்காமையின், வீரத்தின் அடையாளமாகச் சுட்டப்பட்டாலும், சிறு அங்குசம் அதை அடக்குவது போல சாதி என்ற அங்குசம் எளிய மனிதர்களை அடக்கி ஒடுக்கிவிடுகிறது என்ற குறிப்பு வெளிப்படுகிறது.
வணங்கான் என்பது கதைசொல்லியின் கதை அல்ல, அவனது அப்பாவின் கதை என்பது கதையின் ஒரு நுட்பமான அம்சமாகும். ஏனெனில் இன்று கதைசொல்லி வணங்கானாக இருப்பது பெரிய விசயமில்லை மாறாக அவனது அப்பாவின் முயற்சியால் அவனது வருங்காலச் சந்ததியினர் வாழ்க்கை மாறிவிட்டது என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. கதையில் வரும் வணங்கானின் தாத்தாவைப் பற்றிச் சொல்லும்போது, “பணிவின் அடுக்குகள்தான் சமூகம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது” என்ற ஜெயமோகன் வரிகள் ஆழமானதும் நுட்பமானதுமாகும். எனவேதான் அந்தப் பணிவின் எதிராக வணங்கான் என்ற பெயர் கதைக்கு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.
ஒரு மனிதன் அவனாகத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டால் ஒழிய அவனது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது ஒன்றுமேயில்லை என்பதையே இந்த வணங்கான் நமக்கு அறிவுறுத்துகிறது.
இதே போன்ற ஒரு கதைதான் நூறு நாற்காலிகள் என்றாலும்கூட இது சமூகத்தின் மற்றொரு கோணத்தைச் சித்தரிக்கிறது. இந்தக் கதை நம் சமகாலத்தில் நடக்கிறது என்பதோடு, துயரங்கள், அவமதிப்புகள், இயலாமை மற்றும் கோபம் ஆகியனவற்றின் மூலம் கதைசொல்லியின் மனவோட்டங்கள் அற்புதமாகப் பின்னப்பட்டிருப்பதால், முதல் கதையைவிட இந்தக் கதை நம்மைப் பெரிதும் பாதிக்கிறது. கதை மாந்தர்கள் அனைவரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு கச்சிதமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். எந்தெந்த வகையில் எந்தெந்த பாத்திரம் எப்படி எதிர்வினயாற்றுகிறது என்பதை நுட்பமாக, யதார்த்தமாக ஜெயமோகன் காட்டியுள்ளார். பாத்திரங்களின் செயல்பாடுகள் கதையில் துல்லியமாகத் தீர்மானத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் எந்த பாத்திரத்தின் மீதும் நாம் குற்றம் குறை காணமுடிவதில்லை. மாறாக இச்சமூகத்தின் மீதும் அதன் நியதிகளின் மீதும், அது நம் மனதில் காலங்காலமாக விதைத்து வைத்திருக்கும் மூடத்தனத்தின் மீதும் சொல்லவியலாத ஆத்திரம் பிறக்கிறது.
மனிதன் எப்போதும் குழு மனப்பான்மை உடையவன். தான் சாதிக்க நினைக்கும் ஒன்றை, அது நல்லதாக இருப்பினும் கெட்டதாக இருப்பினும், அவனுக்குக் கூட்டம் தேவைப்படுகிறது. அது சாதி, மதம், நாடு, மாநிலம், ஊர், தெரு இப்படி எந்த வகையிலும் இருக்கலாம். இந்த கூட்டமோ குழுவோ இல்லாமல் தனி ஒருவனாக இந்தச் சமூகத்தை ஜெயிப்பது கடினம். கதைசொல்லி தாழ்ந்த சாதியில் இருந்து வந்தவன் என்பது அவனைப் புறக்கணிக்கும் ஒரு காரணமாக இருந்தாலும், வேறு பல காரணங்களையும் நம் அதிகார வர்க்கம் புறக்கணிப்பின் காரணியாகக்கொள்கிறது. உதாரணமாக நல்லவனாக, நோ்மையானவனாக ஒருவன் இருப்பதும், இந்தச் சமூகம் புறக்கணிக்கும் காரணிகளில் ஒன்று. எனவே சாதி மட்டும் குறுக்கே நிற்பதில்லை, தனி ஒருவனின் குணமும் நடத்தையும் கூட அவ்வாறே புறக்கணிக்கவும், எள்ளி நகையாடவும் உரியதாகிறது. ஆனால் அவற்றில் ஏற்படும் வலியும் வேதனையையும் விட பிறப்பைக் கொண்டு ஏற்படும் புறக்கணிப்பின், அவமானத்தின் வலிகள் கொடுமையானவை. 
அந்த வலியின் வேதனையைப் படிப்போரின் உள்ளத்திலும் வெகு ஆழமாக தைக்கும்படி செய்திருக்கிறார் ஜெயமோகன். குறிப்பாக கதைசொல்லியின் அம்மாவின் வாழ்க்கை நம் உள்ளத்தில் ஈட்டியைச் சொருகி குருதியைப் பெருக்குகிறது. இதையும் ஒரு வாழ்க்கை முறையாக நம் சமூகம் வைத்திருக்கிறது என நினைக்கும் போது, அதன் சுரணை கெட்டத்தனம் நம்மை உறைய வைக்கிறது. ‘தம்றானே, கஞ்சி தா தம்றானே’ என்ற குரல் காதுகளில் ரீங்காரமிட்டபடியே இருக்கிறது. காதுகள் இருக்கும் வரை அந்த ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் என்றே தோன்றுகிறது. எனவே கதையைப் படித்து முடித்ததும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பல்வேறு உணர்வுகளுக்கு ஆட்பட்டுத் தத்தளிக்கிறது. அவைகள் மட்டுப்பட்டு நாம் நிதானமடைய நீண்ட நேரம் பிடிக்கிறது. ஒரு கதை மனதை இப்படி ஆக்கிரமிக்க முடியுமா என வியக்கும்படி இந்தக் கதை நம் மனதை வெகுவாக இம்சிக்கிறது. மொழியும், நடையும், வடிவமும், சித்தரிப்பும், அழகாகவும் நேர்த்தியாகவும் கூடிவந்த அற்புதமான கதை. இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கமும் பாதிப்பும் நம் மனதில் சூறாவளியாகச் சுழன்றடிக்கிறது.
இரண்டு கதைகளும் இருவேறு மனநிலையில் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. வணங்கான் வாசித்து முடித்ததும் நம் மனதில் மனிதர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் நூறு நாற்காலிகள் நம் நம்பிக்கையைச் சிதறடித்து, நிகழ்காலத்தின் நிதர்சனத்தைக் கண்முன் நிறுத்துகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தால் மனிதனின் இந்த ஆதாரச் சிக்கல்கள் தீரும் என்ற விடைதெரியாத கேள்வி நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது.
இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும்.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_28.html#sthash.j7JtOoH9.dpuf

No comments:

Post a Comment